இந்த உலகத்திலே இரண்டு வகையான நீதிகள் இருக்கின்றன அவைகள் எப்போதும் ஒன்றுடன் ஒன்று சச்சரவில் ஈடுபட்டு வருகின்றன; அவைகள் கர்த்தருடைய நீதியும் மனிதனின் நீதியும் ஆகும். கர்த்தருடைய நீதி அநேக தடைகளை சந்தித்து வந்தாலும் கூட, அது எப்போதும் மனித நீதியை மேற்கொண்டு நம்மை வெற்றியின் பாதையில் நடத்துகிறது. கர்த்தருடைய வார்த்தை மகத்துவமானதாக இருப்பதே அதன் காரணமாகும். கர்த்தருடைய மகத்துவமான வல்லமை நம்முடன் இருப்பதால், அவருடைய ஆசீர்வாதங்களை நம்மால் ருசிக்க முடிகிறது, கர்த்தருடைய வார்த்தைக்கு நம் இருதயங்களையும், சிந்தனைகளையும் ஆத்துமாக்களையும் அடையும் வல்லமை இருப்பதினால், அது நமக்கு அவருடைய எல்லா ஆசீர்வாதங்களையும் எடுத்து வருகிறது.