ஒவ்வொரு பாவியும் உண்மையான நற்செய்தியை விசுவாசிக்க வேண்டும். கர்த்தர் கொடுத்த நற்செய்தியான இரட்சிப்பு என்பது கர்த்தருடைய நீதியிலே வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும். எபிரெயப் புத்தகத்தை எழுதியவன் உங்கள் தவறான விசுவாசத்தை சரி செய்ய முயற்சி செய்கிறான். ஆகவே, நம்முடைய விசுவாசமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் அத்திவாரத்திலே ஆழமாக வேரூன்ற வேண்டும். இந்த முழுமையான நற்செய்தி சத்தியத்திலே நிச்சயமாக நிற்பவர்கள் இயேசு கிறிஸ்துவுடைய நீதியின் மீதுள்ள விசுவாசத்தில் உறுதியாக நிற்பவர்களே ஆகும்.