தேவனுடைய ஜெபத்தை சரியாக விளக்குவதற்கு, தேவனால் நமக்கு கூறப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து முதலாவதாக நாம் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் அறிந்து அதனைப் புரிந்து கொள்ளும் போது, சத்தியம் நமக்குள் இருப்பதுடனே அதனை நம்முடைய இருதயங்களினாலும் விசுவாசிக்கிறோம். நாம் விசுவாசிக்கின்ற உண்மையான நற்செய்தி நம்மை இதுவரை வழிநடத்தியது, ஆகவே தேவனுடைய ஜெபத்தில் தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் படியான உண்மையான விசுவாசமிக்க வாழ்வை நம்மால் வாழ முடியும்.