நாம் நம்முடைய ஆவிக்குரிய கண்களைத் திறந்து இந்த உலகத்தின் அழகையும் அதிசயங்களையும் தெளிவாக காண வேண்டும். தேவன் மூலமாக இருளில் இருந்து தப்பி நம்மிடம் எந்தப் பாவமும் இல்லை என்ற உணர்வுடனே நம் விசுவாச வாழ்வை வாழும் போது தான் இதற்கு சாத்தியமாகும். நீங்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக மறுபடியும் பிறந்து உங்கள் ஆவிக்குரிய கண்களைத் திறக்கும் போது, இந்த உலகத்திலே மற்றவர்களின் வாழ்வை விடவும் உங்கள் வாழ்வு மகிழ்ச்சியானதாக இருக்கும். ஆகவே நீங்கள் இருளில் இருந்து தப்பி வெளிச்சத்திலே வாசம் செய்ய வேண்டும், தேவன் உங்கள் வாழ்விலே கொடுத்த அனைத்து காரியங்களையும் நீங்கள் அனுபவிக்க வேண்டும், ஏனெனில் கர்த்தருடைய வார்த்தை கீழ்வருமாறு கூறுகிறது, "கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக!" (சங்கீதம் 105:3)