கர்த்தரை மகிமைப் படுத்துவதற்காக நாம் அவருடைய சந்நிதானத்திற்கு முன்னதாக நிற்கும் போதெல்லாம், சில மதச் சடங்குகளின் மூலமாக நாம் அவரை அனுகக் கூடாது, அதற்கு பதிலாக அவர் நமக்கு செய்தவைகளை விசுவாசித்து அவருடைய அன்பிற்காக அவருக்கு நன்றி கூறி நாம் அவரை அனுக வேண்டும். அப்போது மட்டுமே கர்த்தர் நம்முடைய ஆராதனையை ஏற்றுக் கொண்டு தன் பரிசுத்த ஆவியானவரை நம்மீது அளவில்லாமல் ஊற்றுவார்.