தேவனுடைய அன்பினை உங்கள் வாழ்விலே எப்போதும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினால், அவர் குரலை நெருக்கமாக கேளுங்கள். உங்கள் ஊழியத்திலே நீங்கள் தேவனால் நேசிக்கப் பட வேண்டும் என்று விரும்பினால், கர்த்தர் கொடுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உங்கள் இருதயங்களிலே ஏற்றுக் கொண்டு தேவனுடைய செயலைச் செய்யுங்கள். நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அதற்கு ஊழியம் செய்வதினால் தான் தேவன் நம்மை நேசிக்கிறார். தேவனுடைய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இந்த உலகம் முழுவதும் இந்த நற்செய்தியை பரப்ப விசுவாசத்துடனே சேவகம் செய்தால் தேவனால் நம்மை நேசிப்பதை தவிர்க்க முடியாது.