மறுபடியும் பிறத்தலைக் குறித்து எழுதப்பட்ட அநேக கிறிஸ்தவ நூல்களில், வேதம் கூறும் வகையில், ‘நீர் மற்றும் ஆவியைக் குறித்த நற்செய்தியை’ இக்காலத்தில் கூறும் முதல் நூல் இதுவேயாகும். நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறக்கவில்லையெனில் மனிதன் பரலோக ராஜ்ஜியத்தினுள் பிரவேசிக்க இயலாது. மறுபடியும் பிறப்பது என்பதன் பொருள் இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை ஒரு பாவி விசுவாசிப்பதன் மூலம், வாழ்வின் பாவங்களிலிருந்து அவன்/அவள் இரட்சிக்கப் படுவதாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, பாவமற்ற நீதிமான்களாக, பரலோக இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிப்போமாக.