கிறிஸ்தவத்தில் அதிகமாய் பேசப்படுபவை, பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவதும், பரிசுத்த ஆவியானவருடன் வாழ்வதுமாகும். கிறிஸ்தவத்தின் மிக முக்கிய தலைப்புகளான இவற்றைக் குறித்து வெகு சிலருக்கே தெளிவான ஞானம் இருக்கின்றது. உண்மையான பாவவிடுதலை மற்றும் பரிசுத்த ஆவியானவரைக் குறித்து அஞ்ஞானிகளாக இருந்தாலும், அம்மக்கள் இயேசுவை விசுவாசிப்பதாக கூறுகிறார்கள்.
பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான நற்செய்தியைக் குறித்து உங்களுக்கு தெரியுமா? பரிசுத்த ஆவியானவருடன் நீங்கள் வாழவேண்டுமென்று கடவுளிடம் நீங்கள் கேட்க வேண்டுமானால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் அதன் மீது நம்பிக்கையுமிருக்கவேண்டும். இந்நூல் உலகின் கிறிஸ்தவர்கள் தம்முடைய எல்லாப் பாவங்களுக்கும் பாவமன்னிப்பு பெறவும் அதன் மூலமாக பரிசுத்த ஆவியானவரைப் பெறவும் நிச்சயமாக வழிநடத்தும்.