உங்கள் இருதயத்திலுள்ள தாகத்தை இந்நூலின் போதனைகள் தணிக்கும். இன்றைய கிறிஸ்தவர்களுக்கு தாம் அன்றாடம் செய்யும் தம் தனிப்பட்டப் பாவங்களுக்கான உண்மையான தீர்வு தெரியாவிட்டாலும் தொடர்ந்து வாழுகின்றனர். கடவுளின் நீதி என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்களிடமே இந்தக் கேள்வியைக் கேட்பீர்கள் என்றும் இந்நூலில் விளக்கமாக கூறப்பட்டுள்ள கர்த்தரின் நீதியை விசுவாசிப்பீர்கள் என்றும் இந்நூலாசிரியர் விரும்புகிறார்.
முன்குறிக்கப்பட்டத் தத்துவங்கள், நியாயமென காட்டுதல், படிப்படியாக பரிசுத்தமாதல் ஆகியவை கிறிஸ்தவத்தின் பெரும் தத்துவங்களாகும். அவை விசுவாசிகளின் ஆத்துமாவிற்குள் வெறுமையையும் குழப்பத்தையும் எடுத்து வந்தன. ஆனால், அன்பான கிறிஸ்தவர்களே, நீங்கள் இதுவரைப் படித்ததும் நிச்சயப்படுத்தப் பட்டதுமான சத்தியத்தைத் தொடர்வதற்கான சமயம் இதுவேயாகும்.
இந்நூல் உங்கள் ஆத்துமாவை சிறப்பாகப் புரியச் செய்வதுடன் சமாதானத்தை நோக்கியும் வழி நடத்தும், கடவுளின் நீதியைத் தெரிந்து கொண்டு நீங்கள் ஆசீர்வாதத்தை உரித்தாக்க வேண்டுமென நூலாசிரியர் விரும்புகின்றார்.