இன்று அநேக கிறிஸ்தவர்கள் வாதைகளுக்கு முந்திய எடுத்துக்கொள்ளப்படும் மகிழ்ச்சியை நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஏழுவருடங்களுக்கு முந்திய பெரும் வாதைக்கு முன் தாம் எடுத்துக் கொள்ளப் படுவோம் என்ற தவறான இறையியலின் போதனைகளை அவர்கள் விசுவாசிப்பதால், மெத்தனமான மத வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பரிசுத்தவான்களின் எடுத்துக்கொள்ளப்படும் மகிழ்ச்சியானது ஏழு எக்காளங்களும் ஊதப்பட்டு, ஆறு வாதைகளும் ஊற்றப்பட்ட பிறகே நடக்கும் - அதாவது உலகின் குழப்பங்களுக்கிடையே அந்திகிறிஸ்து தோன்றி, மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்கள் இரத்தசாட்சிகளாக்கப்பட்டு ஏழாம் எக்காளம் ஊதப்படும் போதே எடுத்துக்கொள்ளப்படும் மகிழ்ச்சி உருவாகும். இயேசு பரலோகத்திலிருந்து இறங்கி வருவதும், மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்கள் உயிரோடெழும்புவதும், எடுத்துக்கொள்ளப்படும் மகிழ்ச்சி அவர்களுக்கு கிட்டுவதும் இச்சமயத்திலேயாகும் (1 தெசலோனிக்கேயர் 4:16-17)
“நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை” விசுவாசித்து மறுபடியும் பிறந்த நீதிமான்கள் உயிரோடெழுந்து எடுத்துக்கொள்ளப்படுதலில் பங்கேற்று, ஆயிரவருட அரசாட்சிக்கும் நித்தியமான பரலோக ராஜ்யத்திற்கும் உரிமையுள்ளவர்களாகும் அதே சமயம், இந்த முதல் உயிர்த்தெழுதலில் பங்கேற்க முடியாத பாவிகள் கர்த்தர் ஊற்றும் ஏழு பாத்திரங்களின் தண்டனைக்கு ஆளாகி நரகத்தின் அக்கினியில் எறியப்படுவர்.