பழைய ஏற்பாட்டில், கர்த்தர் தமக்கொரு ஆசரிப்புக்கூடாரத்தை அமைக்க மோசேயிற்கு கட்டளையிட்டதைப் போல், அவர் நமக்குள் வாசஞ் செய்யும்படியாக, நம்மிருதயங்களில் அவருக்கொரு வாசஸ்தலத்தை அமைக்குமாறு கூறுகிறார். நம்மிருதயங்களினுள் அவருக்கு வாசஸ்தலம் அமைக்க உபயோகிக்கவேண்டிய விசுவாசத்தின் பொருட்கள் நற்செய்தி வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியே. இப்பொருட்களாலான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் நம்மைக் கழுவி சுத்தஞ் செய்ய வேண்டும். தமக்கொரு வாசஸ்தலத்தை அமைக்குமாறு கர்த்தர் கூறுகையில், நம்மிருதயங்களை வெறுமையாக்கி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்குமாறு கூறுகிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நம்மிருதயங்கள் சுத்திகரிக்கப்பட வேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நம்மிருதயங்களின் அணைத்துப் பாவங்களையும் கழுவும்போது, அவற்றில் வாசஞ் செய்ய கர்த்தர் வருகிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமே உங்களால் உங்களிருதயங்களில் பரிசுத்த ஆலயத்தைக் கட்ட முடியும். ஆலயத்தை நீங்களே கட்ட முயன்று, இதுவரை, உங்களில் சிலர், இருதயங்களைச் சுத்திகரிக்கும்படி மனம் வருந்தி ஜெபித்துக் கொண்டிருந்திருப்பீர்கள். ஆனால் இந்த தவறான விசுவாசத்தைக் கைவிட்டு, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து உங்கள் மனங்களை புதுப்பிக்க வேண்டிய நேரம் இதுவே.