எல்லாப் பாவங்களையும் அவர்களின் பாவங்களிலிருந்து விடுதலையாக்குவதற்காக, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் வந்த கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவை விசுவாசிக்கும் ஒருவர், தன்னுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டு, பிதாவாகிய கர்த்தரின் பிள்ளையாகிறார்.
நம்மிடம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் வந்த, கர்த்தராகிய இயேசு, பிதாவாகிய கர்த்தரின் குமாரராவார் என்று யோவான் எழுதிய முதலாவது நிருபம் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசுவே கர்த்தர் என்று (1 யோவான் 5:20) மிக அழுத்தமாக இந்நிருபம் வலியுறுத்துகிறது, மேலும் ஐந்தாம் அதிகாரத்தில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு உறுதியாக சாட்சியளிக்கிறது.
இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என விசுவாசித்து அவரைப் பின்பற்ற நாம் தயங்கக்கூடாது.