ஆசரிப்புக் கூடாரத்தில் மறைந்திருக்கும் உண்மையை நாம் எப்படி கண்டுபிடிக்க முடியும்? ஆசரிப்புக் கூடாரத்தின் உண்மைப் பொருளான, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தெரிந்துக்கொள்வதன் மூலம் இக்கேள்விக்கான சரியான பதிலை நாம் அறிந்து அதனைப் புரிந்துக் கொள்ளமுடியும்.
ஆசரிப்புக் கூடார வாசலில் உபயோகப்படுத்தப்பட்ட இளநீல நூலும், இரத்தாம்பர நூலும், சிகப்பு நிற நூலும், மெல்லிய பஞ்சு நூலும், மனிதர்களை இரட்சிக்க இயேசு கிறிஸ்து செய்தவைகளை நமக்கு காட்டுகின்றன. இப்படியாக மெல்லிய பஞ்சு நூல் இணைக்கப்பட்டுள்ளதுபோல் பழைய ஏற்பாட்டின் ஆசரிப்புக் கூடார சொற்களும் புதிய ஏற்பாட்டின் சொற்களும் நிச்சயமாக நெருக்கமான தொடர்புள்ளவை. ஆனால், துரதிருஷ்டவசமாக, கிறிஸ்தவத்தில் சத்தியத்தைத் தேடுபவர்களிடமிருந்து வெகுகாலமாக இந்த உண்மை மறைக்கப்பட்டிருந்தது.
இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து, யோவானால் ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் இரத்தம் சிந்தினார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் புரிந்துகொண்டு அதனை விசுவாசிக்காவிட்டால் ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப்பட்ட உண்மையை நம்மால் ஒருபோதும் கண்டுபிடிக்கமுடியாது. ஆசரிப்புக் கூடாரத்தின் இந்த உண்மையை இப்போது நாம் கற்று அதனை நம்ப வேண்டும். ஆசரிப்புக் கூடார வாசலில் அறிவிக்கப்பட்ட இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல், மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் உண்மையை நாம் உணர்ந்து அந்த உண்மையை விசுவாசிக்கவேண்டும்.