இன்றைய கிறிஸ்தவம் வெறும் உலக மதமாக மாறிவிட்டது. இன்று அநேக கிறிஸ்தவர்கள் பாவிகளாகவே உள்ளனர் ஏனெனில் அவர்கள் ஆவிக்குரிய விசுவாசத்தால் மறுபடியும் பிறக்கவில்லை. இதன் காரணம் யாதெனில் அவர்கள் கிறிஸ்தவ கொள்கைகளை மட்டுமே சார்ந்திருந்தனர், இதுவரை அவர்கள் நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறிந்திருக்கவில்லை.
ஆகவே விருத்தசேதனவாதிகளின் ஆவிக்குரிய தவறுகளை நீங்கள் அறிந்து அத்தகைய விசுவாசங்களுக்கு தொலைவாக இருப்பதற்கான நேரம் இதுவேயாகும். மனம் வருந்தி ஜெபித்தலிலுள்ள குளறுபடிகளையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் இன்னமும் உறுதியாக எழுந்து நிற்பதற்கான நேரமும் இதுவேயாகும்.
இந்த உண்மையான நற்செய்தியை இதுவரை நீங்கள் விசுவாசிக்கவில்லையெனில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் நம்மிடம் வந்த நம் இரட்சகரை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். நற்செய்தியின் சத்தியமாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நம்பிக்கையுடன் முழு கிறிஸ்தவராக இப்போது நீங்கள் மாற வேண்டும்.