ஆதியாகமம் புத்தகத்தின் மூலமாக நமக்கான தன்னுடைய நல்ல விருப்பங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார். நமக்கான கர்த்தருடைய சித்தம் எங்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளது? அது இயேசு கிறிஸ்துவின் மூலமாக கர்த்தரால் நிறைவேற்றப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தில் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. விசுவாசத்தினால் நாம் இந்த கர்த்தருடைய நல்ல விருப்பத்திற்குள்ளாக வர வேண்டும், அது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக அறிவிக்கப் பட்டுள்ளது. அப்படிச் செய்வதற்கு, கர்த்தருடைய வார்த்தையை நாம் எண்ணும் போது, நமக்குள் இருக்கும் மாமிசத்திற்குரிய சிந்தனைகளை அகற்றி விட்டு, கர்த்தருடைய வார்த்தையை அப்படியே நாம் விசுவாசிக்க வேண்டும். இதுவரை நமக்குள் சேர்ந்துள்ள தவறான ஞானத்தை எல்லாம் நாம் தூர எறிந்து விட வேண்டும், மேலும் கர்த்தருடைய நீதியில் நம்முடைய விசுவாசத்தை வைத்து நம்முடைய ஆவிக்குரிய கண்களைத் திறக்க வேண்டும்.