ஆதியாகமப் புத்தகத்தில், கர்த்தர் நம்மை எதற்காக படைத்தார் என்ற நோக்கம் அடங்கியிருக்கிறது. கட்டிடக் கலைஞர்கள் ஒரு கட்டிடத்தை வடிவமைக்கும் போது அல்லது ஒரு ஓவியன் ஒரு ஓவியத்தை வரையும் போது, அவர்கள் தம்முடைய திட்டத்திற்கான செயலில் இறங்குவதற்கு முன்னால் செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்து தம்முடைய மனதில் அவற்றை முதலாவதாக உருவாக்கிக் கொள்ளுகிறார்கள். இதனைப் போலவே, கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைப்பதற்கு முன்னால் மனிதகுலத்தின் இரட்சிப்பைக் குறித்து அவருடைய மனதில் இருந்தது, இந்த நோக்கத்தை தன் மனதில் வைத்து ஆதாமையும் ஏவாளையும் அவர் படைத்தார். பரலோகத்தின் ஆளுகையை கர்த்தர் நமக்கு விவரிக்க வேண்டியதிருந்தது, அதனை நம்முடைய மாமிசத்தின் கண்களால் காண முடியாது என்பதால், நம்மால் கண்டு புரிந்து கொள்ளக் கூடிய பூமியின் ஆளுகையை உதாரணமாகக் காட்டுகிறார்.