தேவன் உருவாக்கி நமக்குத் தந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த சத்தியத்தை இன்றைய கிறிஸ்தவர்கள் அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். இப்படியாக, அவர்கள் கிறிஸ்தவத்தின் போதனைகளைத் தான் தொடர்ந்து விசுவாசிக்கிறார்களே தவிர நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதில்லை. அந்த காரணத்தினாலே, அவர்கள் இயேசுவை விசுவாசிப்பதாக கூறிக் கொண்டாலும் கூட, அவர்கள் பொன் கன்றுக் குட்டியை தொடர்ந்தும் விசுவாசித்து அதனைப் பின்பற்றுகிறார்கள்.
கிறிஸ்தவத்திற்குள்ளே பொன் கன்றுக் குட்டியை கர்த்தராக ஆராதிப்பவர்களை நாம் பிரித்துணர வேண்டும். சத்தியத்தின் கர்த்தருக்கு முன்னால் நாம் திரும்பி வருவதின் மூலமாக, நீதியின் பலிகளைக் கர்த்தருக்கு காணிக்கையாக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது விசுவாசம் வைத்து பாவமன்னிப்பை பெற்றுக் கொண்ட மக்கள் விசுவாசத்துடன் அளிக்கும் நீதியின் பலி காணிக்கையே கர்த்தர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்ளும் பலிகாணிக்கையாக இருக்கிறது. கர்த்தருக்கு முன்னே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து கர்த்தரால் கொடுக்கப் பட்ட நீதியின் பலிகாணிக்கையை நீங்கள் அவருக்கு கொடுக்கிறீர்களா இல்லையா என்பதைக் குறித்து நீங்கள் தீவிரமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.