நாம் வல்லமையற்றவர்களாக இருந்தாலும் கூட கர்த்தருடைய வார்த்தையில் வல்லமை இருப்பதால், வார்த்தை நிலத்தில் விழும் போது அது தவறாமல் கனி கொடுக்கிறது. மேலும், கர்த்தருடைய வார்த்தை உயிருடன் இருப்பதால் அது இன்றும் நாளையும், என்றென்றும் மாறாது இருப்பதை நாமே நேரடியாக காண்கிறோம். மனிதர்களின் வார்த்தைகளைப் போலில்லாமல், கர்த்தருடைய வார்த்தையை என்றுமே மாறாது, ஏனெனில் அது உண்மையுள்ளதாக இருக்கிறது. கர்த்தர் பேசும் போது, அவர் தன்னுடைய வார்த்தைகளின் படியாக அப்படியே நிறைவேற்றுகிறார்.
கர்த்தருடைய வார்த்தைக்கு வல்லமை இருப்பதால், “வெளிச்சம் உண்டாகக் கடவது” என்று கர்த்தர் கூறிய போது அங்கே வெளிச்சம் உண்டாயிற்று, மேலும் “அவர் பெரிய ஜோதியும் சிறிய ஜோதியும் உண்டாகக் கடவது,” என்று கூறிய போது அவர் கூறியபடியே அது நிறைவேறியது.