நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நம்மைத் தன்னுடைய பிள்ளைகளாக மாற்ற விரும்புவதே கர்த்தர் நமக்காக செய்ய விரும்புவதாகும்.
மனிதர்களாகிய நாம் முதலாவதாக கர்த்தருடைய படைப்புகளாக பிறந்தோம், ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டால், மீண்டுமாக நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக பிறப்போம். இதன் பொருளானது, தேவன் வந்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்த பிறகு குருடர்களாகிய நாம் பார்வையைப் பெற்றுக் கொண்டோம் என்பதாகும்.