இன்று, கர்த்தர் தன்னுடைய சபையை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினை விசுவாசிக்கும் விசுவாசிகளை வைத்து உருவாக்கியிருக்கிறார். கர்த்தருடைய சபையானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இரட்சிக்கப் பட்டவர்கள் ஒன்று கூடும் ஒரு இடமாகும். ஆகவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது உங்கள் இருதயங்கள் இப்போது விசுவாசம் வைத்தால், உங்களால் உண்மையான விசுவாச வாழ்வை வாழ முடியும். கர்த்தருடைய சபையில் மட்டுமே இத்தகைய ஒரு வாழ்வு சாத்தியமாகும். அதற்கு மேலும், இத்தகைய விசுவாசம் மட்டுமே நாம் தேவனுடைய ராஜ்யத்திலே நித்தியமாக வாழும் படியாக நம்மை தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறது. இந்த விசுவாசத்தின் மூலமாக, பிதாவாகிய கர்த்தர், இயேசு கிறிஸ்து, மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஆகியோரிடமிருந்து நாம் இரட்சிப்பின் அன்பையும் பரலோகத்தின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.