அனைத்து கிறிஸ்தவர்களும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போது அவர்கள் பழைய ஏற்பாட்டிலே எழுதப் பட்டுள்ள ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப் பட்டுள்ள வெளிப்பாடுகளில் இருந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை புரிந்து கொள்ளுவார்கள். விசுவாசத்தால் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டதைக் குறித்தும் அவர்கள் நிச்சயமாக இருப்பார்கள். நீங்கள் இன்னமும் இத்தகைய விசுவாசத்தை பெற்றுக் கொண்டிராவிட்டால், அதனை நீங்கள் கூடிய சீக்கிரமாகவே பெற்றுக் கொள்ள பாடுபடவேண்டும்.
பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய இருதயத்தில் தரித்திருக்க வேண்டுமானால் நீங்கள் முதலாவதாக பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்ய, தேவனால் நிறைவேற்றப் பட்ட கர்த்தருடைய நீதியின் மீதுள்ள விசுவாசத்தை நீங்கள் தரித்துக் கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்தில் வாசம் செய்வதற்கான ஒரே வழி இதுவேயாகும்.