மாற்கு எழுதிய நற்செய்தியானது இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரர் என்றும் அவரே கர்த்தர் என்றும் அறிவிக்கிறது. அவர் நம் இரட்சகர் என்றும் கூட அது சாட்சி கூறுகிறது. மாற்கு நற்செய்தியை எழுதியவன் இயேசுவானவரைக் குறித்து, அவர் கர்த்தரும் நம் இரட்சகருமாக இருக்கிறார் என்று வல்லமையுடனே சாட்சி கூறுவதை நம்மால் காண முடியும். இதனால் தான் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் அடிப்படையிலே மாற்குவின் நற்செய்தியிலே அறிவிக்கப் பட்டுள்ள இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சி கூற நான் விரும்புகிறேன். கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மையானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலே காணப் படுகிறது என்பது வெளிப்படை. இயேசுவானவர் நிக்கோதேமுவிடம் கூறினார், "ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (யோவான் 3:5).