இந்த உலகத்தின் முழு வரலாற்றையும் நகர்த்துபவர் இயேசு கிறிஸ்துவேயாகும். உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் எல்லா மனிதர்களையும் இரட்சிப்பதற்காக நம் தேவன் இந்த பூமிக்கு வந்தார், மேலும் அவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு புதுவாழ்விற்கான அப்பமாகவும் மாறினார். குறிப்பாக, நம்முடைய பாவங்களுக்காக நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருந்த நமக்கு, இந்த புதுவாழ்வை கொடுக்கவே நம் தேவன் உங்களையும் என்னையும் தேடி இங்கே வந்தார்.