பொருளடக்கம்
முன்னுரை
1. சிலைவணக்கமானது வேதப்புரட்டல் என்பது உங்களுக்குத் தெரியாதா? (1 ராஜாக்கள் 10:1-29)
2. வேதப்புரட்டர்கள் மீதான கர்த்தருடைய சாபம் (1 ராஜாக்கள் 15:25-34)
3. ஆகாப் ராஜாவைப் போலிருக்கும் இன்றைய வேதப்புரட்டர்கள் (1 ராஜாக்கள் 21:1-26)
4. இந்த பூமியிலே இன்னமும் கர்த்தருடைய ஊழியர்கள் மிச்சமிருக்கிறார்கள் (1 ராஜாக்கள் 22:1-40)
5. கிறிஸ்தவர்கள் இப்போது முற்றிலும் திரும்பி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும் (1 ராஜாக்கள் 22:51-53)
6. செல்வங்களை மட்டுமே தேடும் இந்த கிறிஸ்தவ தலைவர்கள் யார்? (2 ராஜாக்கள் 5:1-27)
7. உண்மையான இரட்சிப்பு இன்னதென்று, நாளை இந்நேரத்தில் அறிந்து கொள்ளுவாய் (2 ராஜாக்கள் 7:1-20)
8. இன்றைய கிறிஸ்தவத்திற்குள் இருக்கும் கள்ளத்தீர்க்கதரிசிகள் யார்? (மத்தேயு 7:15-27)
9. இயேசுவே கிறிஸ்து என்பதை விசுவாசிக்காத வேதப்புரட்டர்களை சத்தியத்திற்கு வழிநடத்துவோமாக (1 யோவான் 5:1-12)
10. மறுபடியும் பிறந்தவர்களின் ஜீவனை நீங்கள் கொல்லக் கூடாது (ஆதியாகமம் 9:1-7)
11. சிலைவணக்கம் செய்யும் சாலொமோனைப் போல கர்த்தருக்கு முன்னதாக சிலைகளை வணங்குவதை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்? (1 ராஜாக்கள் 9:1-9)
12. மனிதர்களின் ஆத்துமாக்களை குறிவைக்கும் பலத்த வேட்டைக்காரர்கள் இருக்கிறார்கள் (ஆதியாகமம் 10:1-14)
13. காமின் சந்ததியினர், தலைசிறந்த ஆத்தும வேட்டைக்காரார்கள் (ஆதியாகமம் 10:1-32)
14. பாபேல் கோபுரத்தின் பாடம் (ஆதியாகமம் 11:1-9)
15. கல்லையும் காரையையும் போன்ற தூய்மையான விசுவாசத்தால் நீங்கள் உங்கள் விசுவாச வாழ்வை வாழ வேண்டும் (ஆதியாகமம் 11:1-9)
தேவன் உருவாக்கி நமக்குத் தந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த சத்தியத்தை இன்றைய கிறிஸ்தவர்கள் அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். இப்படியாக, அவர்கள் கிறிஸ்தவத்தின் போதனைகளைத் தான் தொடர்ந்து விசுவாசிக்கிறார்களே தவிர நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதில்லை. அந்த காரணத்தினாலே, அவர்கள் இயேசுவை விசுவாசிப்பதாக கூறிக் கொண்டாலும் கூட, அவர்கள் பொன் கன்றுக் குட்டியை தொடர்ந்தும் விசுவாசித்து அதனைப் பின்பற்றுகிறார்கள்.
கிறிஸ்தவத்திற்குள்ளே பொன் கன்றுக் குட்டியை கர்த்தராக ஆராதிப்பவர்களை நாம் பிரித்துணர வேண்டும். சத்தியத்தின் கர்த்தருக்கு முன்னால் நாம் திரும்பி வருவதின் மூலமாக, நீதியின் பலிகளைக் கர்த்தருக்கு காணிக்கையாக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது விசுவாசம் வைத்து பாவமன்னிப்பை பெற்றுக் கொண்ட மக்கள் விசுவாசத்துடன் அளிக்கும் நீதியின் பலி காணிக்கையே கர்த்தர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்ளும் பலிகாணிக்கையாக இருக்கிறது. கர்த்தருக்கு முன்னே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து கர்த்தரால் கொடுக்கப் பட்ட நீதியின் பலிகாணிக்கையை நீங்கள் அவருக்கு கொடுக்கிறீர்களா இல்லையா என்பதைக் குறித்து நீங்கள் தீவிரமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ပိုများသော